புதுடில்லி:கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஐந்து வயது குழந்தையின் சாட்சியத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து >ள்ளது. இங்கு 2008ல் ஒரு கும்பல் கொள்ளையடித்தபோது இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2015ல் தீர்ப்பளித்தது.
இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட ஹரி ஓம்மின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது. அதே நேரத்தில் மூன்று பேரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து 2017ல் தீர்ப்பளித்தது.தூக்கு தண்டனையை எதிர்த்து ஹரி ஓம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் ஐந்து வயது குழந்தை அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் வாக்குமூலத்தில் சில முரண்பாடுகள் உள்ளன. குழந்தையின் சாட்சியத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியாது. அதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE