கோவை : ''தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூட்டை, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக ஸ்டாலின் பொய் தகவல் பரப்பியுள்ளார்,'' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் செல்வராஜ் கூறினார்.
செல்வராஜ் கூறியதாவது:1970ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 10 பைசா இருந்ததை,16 பைசாவாக உயர்த்தினார்.இதற்கு எதிராகபோராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, துப்பாக்கி சூடுநடத்தியதில்,46 பேர் இறந்தனர். அ.தி.மு.க., 1977ல் தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராமசபை என்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஆட்சியில்தான் இச்சம்பவம் நடந்ததாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அப்பட்டமாக பொய் சொல்லியுள்ளார்.எம்.ஜி.ஆர்., 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அதை தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி செய்ததாக போலி விளம்பரம் செய்துள்ளார். இதற்கு அவர் விவசாயிகளிடமும், மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE