கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்தவர்கள் எஸ்.ஐ., தேர்வில் எத்தனை பேர்: உயர்நீதிமன்றம் கேள்வி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மதுரை:தமிழ்வழியில் படித்தவர்களில் எத்தனை பேர் எஸ்.ஐ.,தேர்வு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் விபரத்தை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமேஸ்வரம் விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனு: நான் பிளஸ் 2 வரை மற்றும் பட்டப் படிப்பை தமிழ் வழியில் முடித்தேன். அதற்குரிய பி.எஸ்.டி.எம்.,சான்று உள்ளது. எஸ்.ஐ.,பணி நேரடித் தேர்விற்கு 2019

மதுரை:தமிழ்வழியில் படித்தவர்களில் எத்தனை பேர் எஸ்.ஐ.,தேர்வு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் விபரத்தை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமேஸ்வரம் விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனு: நான் பிளஸ் 2 வரை மற்றும் பட்டப் படிப்பை தமிழ் வழியில் முடித்தேன். அதற்குரிய பி.எஸ்.டி.எம்.,சான்று உள்ளது. எஸ்.ஐ.,பணி நேரடித் தேர்விற்கு 2019 மார்ச்சில் 8 ல் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேர்காணலுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் டிச.,1 ல் வெளியானது. அதில் எனது பெயர் இல்லை. தேர்வு நடைமுறைகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு நடைமுறைகளில் உள்ளதுபோல், எஸ்.ஐ.,பணிக்கான 3 கட்ட தேர்வின் ஒவ்வொரு நிலையிலும், தமிழ் வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும்.

தற்காலிக தேர்வுப் பட்டியல் மற்றும் அதனடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

டிச.,23 ல் நீதிபதிகள், 'ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப் படுகிறது,' என்றனர். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'தமிழ் வழியில் படித்தோர் 13 ஆயிரம் பேர் எஸ்.ஐ.,தேர்விற்கு விண்ணப்பித்தனர். எஸ்.ஐ.,பணி இறுதித் தேர்வில்தான் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை உள்ளது. 50 சதவீத நேர்காணல் முடிந்துவிட்டது.

நீதிமன்ற தடையால் அதை தொடர முடியவில்லை. ஏற்கனவே இதுபோன்ற வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்,' என தெரிவித்தது. நீதிபதிகள்: தமிழ்வழியில் படித்தவர்களில் எத்தனை பேர் எஸ்.ஐ.,தேர்வு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் விபரத்தை அரசுத் தரப்பில் ஜன.,11ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X