அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றும் வரை போராட்டம்: மதுரையில் புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி பேச்சு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மதுரை:''தமிழக அரசு அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்படும் போது ஏன் பட்டியல் இனத்தில் தேவேந்திர குல வேளாளர் இருக்க வேண்டும். பட்டியலினத்திலிருந்து வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்,'' என, மதுரையில் புதிய தமிழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனர் கிருஷ்ணசாமி பேசினார்.அவர் பேசியதாவது: குடும்பன், பள்ளன் உள்ளிட்ட 7

மதுரை:''தமிழக அரசு அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து சமூக மக்களுக்கும் வழங்கப்படும் போது ஏன் பட்டியல் இனத்தில் தேவேந்திர குல வேளாளர் இருக்க வேண்டும். பட்டியலினத்திலிருந்து வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்,'' என, மதுரையில் புதிய தமிழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனர் கிருஷ்ணசாமி பேசினார்.

அவர் பேசியதாவது: குடும்பன், பள்ளன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அரசாணை வெளியிட வேண்டும். மேலும் எங்களது ஒற்றை கோரிக்கை பட்டியலினத்திலிருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்ற வேண்டும் என்பது தான்.

நாங்கள் இன்றிலிருந்து தலித்துக்கள் அல்ல. டாக்டர் அம்பேத்கரும் இந்த சமூகத்தில் இருப்பது அவமானமாக இருப்பதாகவும், வேறு சமூகத்திற்கு மாற வேண்டும் எனவும், மதம் மாற மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார். தலித் என்ற எங்கள் மீது படிந்துள்ள கறையை போக்க வேண்டும். இந்தியர்களாக வாழ விரும்புகிறோம்.பட்டியலின வெளியேற்றம் செய்யாமல் அ.தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலுக்கு எப்படி ஓட்டு கேட்டு செல்ல முடியும்.

அப்படி ஓட்டு கேட்டு வந்தால் நீங்கள் விடுவீர்களா. பட்டியலின வெளியேற்றம் செய்யாமல் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால் தடுக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி இதுகுறித்து பரிந்துரை செய்திருப்பதாக கூறுகிறார். பரிந்துரை மட்டும் செய்வதாக கூறிவிட்டு அவர்கள் பிரசாரத்திற்கு வரவிடக்கூடாது, என்றார்.


மறியல்



முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கட்சியினர் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதை கண்டித்து கட்சியினர் பழங்காநத்தம் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். பின் காளவாசலில் இருந்து பழங்காநத்தத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X