வடவள்ளி : தேனி, உத்தமபாளையத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 71. இவர், 40 பேருடன், கோவை வேளாண் பல்கலையில் நடந்த ஆடு வளர்ப்பு பயிற்சிக்கு வந்திருந்தார்.
பயிற்சி முடித்து விட்டு, நேற்று இரவு, 7:00 மணிக்கு, மருதமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். வரிசையில் நின்று, கோவில் மண்டபத்திற்குள் செல்லும் போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நெடுஞ்செழியனை பரிசோதனை செய்தபோது, உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE