சென்னை:தமிழகம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்ள, காங்., சார்பில், கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி உட்பட மூவர், மேலிட பொறுப்பாளர்களாக, நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், வரும் மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை ஒட்டி, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை, சமீபத்தில், டில்லி மேலிடம் வெளியிட்டது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் பிரசார, நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கு, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி, ஆந்திராவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதின் ராவுத் ஆகிய மூவர், மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதலுடன் அமைப்பு பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர்களில், வீரப்பமொய்லி ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக பணியாற்றி உள்ளார். தி.மு.க., மேலிடத்திற்கும் நெருக்கமானவர்.தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு செய்வது போன்ற பணிகளில், மேலிட பொறுப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE