பொது செய்தி

இந்தியா

ஜெர்மன் பிரதமருடன் பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' சில் ஆலோசனை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமர், ஏஞ்சலா மார்க்கெல் உடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர், நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக அவர் விரிவாக எடுத்துரைத்தார்.பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மார்க்கெல் உடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக

புதுடில்லி:ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமர், ஏஞ்சலா மார்க்கெல் உடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், பிரதமர், நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக அவர் விரிவாக எடுத்துரைத்தார்.பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:ஜெர்மனி பிரதமர், ஏஞ்சலா மார்க்கெல் உடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள், ஐரோப்பிய யூனியனுடனான உறவுகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் துவக்கப்பட உள்ளது குறித்தும், உலக நாடுகளுக்கு வினியோகம் செய்யும் தன் உறுதி குறித்தும் மோடி எடுத்துரைத்தார்.இந்தியா - ஜெர்மனி இடையேயான உறவின், 70 வது ஆண்டு மற்றும் ராணுவ உறவின், 20வது ஆண்டை யொட்டி, விரைவில் இரு தரப்பு சந்திப்பு நடத்துவது குறித்தும், இருவரும் விவாதித்தனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X