பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் சர்வதேச தரத்தில் பாரதி அருங்காட்சியகம்: பாரதியார் பல்கலையில் பணி துவக்கம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோவை:கோவை பாரதியார் பல்கலையில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள பாரதி அருங்காட்சியகத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.பாரதியார் பிறந்த நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1982ம் ஆண்டு கோவையில் பாரதியார் பல்கலை துவக்கப்பட்டது. தற்போது பாரதியாரின் நினைவு தின நுாற்றாண்டு விழா, 2020ம் ஆண்டு செப்., 12 முதல், 2021ம் ஆண்டு செப்., 12 வரை அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பாரதியாரின் புகழ்

கோவை:கோவை பாரதியார் பல்கலையில் சர்வதேச தரத்தில் அமைய உள்ள பாரதி அருங்காட்சியகத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

பாரதியார் பிறந்த நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1982ம் ஆண்டு கோவையில் பாரதியார் பல்கலை துவக்கப்பட்டது. தற்போது பாரதியாரின் நினைவு தின நுாற்றாண்டு விழா, 2020ம் ஆண்டு செப்., 12 முதல், 2021ம் ஆண்டு செப்., 12 வரை அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பாரதியாரின் புகழ் நிலைத்திருக்கும் வகையில், சர்வதேச தரத்தில் 'காணி நிலம்' என்ற பெயரில் பாரதி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

பாரதியார் பல்கலை வளாகத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், 'மொத்தம், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரதி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு தமிழக அரசு, 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

வரைபடம் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் இதற்கான கால்கோள் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.நுாலகம், தரவு மையம்திட்ட ஒருங்கிணைப்பாளரான பல்கலை தமிழ்த்துறை தலைவர் சித்ரா கூறியதாவது:இங்கு ஒரு நிர்வாக அலுவலக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதில், ஆய்வு திட்ட பணி குறித்த ஆலோசனை, நாட்டிய பள்ளி, இசை பள்ளி, பாரதி குறித்த சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

பெரிய திரை கொண்ட கலையரங்கம் அமைக்கப்பட உள்ளது. இங்கு பாரதியின் கனவு, பாரதி குறித்த ஆவண படம், குறும்படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நாடகங்கள், கவியரங்கம், கருத்தரங்குகள், பட்டிமன்றம், இலக்கிய கூட்டம், அறிவு மேலாண்மை சார்ந்த கூட்டங்களை நடத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

அதேபோன்று பெரும் தரவு மையம் அமைக்கப்பட உள்ளது. பாரதி பெயரில், 60 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நுாலகம் ஒன்றும் கட்டமைக்கப்பட உள்ளது. பாரதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், தலைவர்களுடனான சந்திப்பு, முக்கிய நிகழ்வுகள், பெண் சுதந்திரம், சமூக முன்னேற்றம் உள்பட அவரது பிறப்பு முதல் இறப்பு வரை நடந்த சம்பவங்களை காட்சிப்படுத்தி ஒரு பெரிய அருங்காட்சியகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது.

பாரதியின் எட்டயபுரம், சென்னை, புதுவை வீடுகளின் மாதிரி இல்லங்கள், குயில் தோப்பு, சிறுவர் பூங்கா உள்பட பல்வேறு விஷயங்கள் இடம் பெற உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X