திருப்பூர்:திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில், வடக்கு தாலுகா அலுவலகம் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.,) மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார், சோதனை மேற்கொண்டனர்.
தாலுகா அலுவலகத்தில் சர்வேயர், கிராம நிர்வாக உதவியாளரிடம், தலா, 5,450 ரூபாய் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 2 லட்சம் ரூபாய், உட்பட கணக்கில் வராத, 2 லட்சத்து, 89 ஆயிரத்து, 810 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், இடைத்தரகர்கள் செந்தில்குமார், எஸ்.செந்தில்குமார், சசிகுமார், ஈஸ்வரமூர்த்தி, பாஸ்கர் மற்றும் வடக்கு தாலுகாவை சேர்ந்த சர்வேயர் தனசேகரன், கிராம உதவியாளர் செந்தில்குமார் என, எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கப்படுகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE