சென்னை:தமிழகம் முழுதும், இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீவிரம் அடைந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு மேலாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில், மழை தீவிரமாக பெய்துள்ளது.இந்நிலையில், வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:கிழக்கு திசை காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.இன்று பகல் வரையிலான காலத்தில், கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், இடி, மின்னலுடன் சில இடங்களில், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.இன்று முதல் மூன்று நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில், ஜனவரியில் ஒரு நாள் மழை அளவாக, 1915ம் ஆண்டு, 21 செ.மீ, பெய்துள்ளது. அந்த அளவே தற்போதும் நீடிக்கிறது. இன்னும் அந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை.செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சம், 21 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE