சென்னை:பயணிக்கு திடீரென வலிப்பு வந்ததால், விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கப் பட்டது.
சென்னையில் இருந்து, நேற்று காலை, 9:45 மணிக்கு, கேரள மாநிலம், திருவனந்தபுரம் செல்லும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 93 பயணியருடன் புறப்பட தயாரானது. பயணியர் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்காக, வரிசையில் நின்றனர்.அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த, டோப்ஹோ ஜேக்கப், 36 என்பவரும் நின்றிருந்தார்.
அவர், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். இதில், அவருக்கு வலிப்பு நோய் வந்துள்ளது தெரிந்தது.அந்த நபர் சிகிச்சை முடித்து, மீண்டும் திருவனந்தபுரம் விமானத்தில் பயணிக்க, பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வந்தார்.
விமான நிறுவனத்தினர், அந்த நபருக்கு அனுமதி மறுத்து, அவரது பயணத்தை ரத்து செய்தனர் .'விமான போக்குவரத்து விதிகளின்படி, வலிப்பு நோய் உள்ளவர்கள், விமானங்களில் தனியாக பயணம் செய்ய அனுமதி கிடையாது. அதனால், டோப்ஹோ ஜேக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டது' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE