பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி சிவன் கோயில்களில் ஜீவராசிகளுக்கு படி அருளிய லீலை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி,நயினார்கோவில் சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியருளிய காலபைரவஅஷ்டமி விழாநடந்தது.பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 5:00 மணி தொடங்கி மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு
 பரமக்குடி சிவன் கோயில்களில் ஜீவராசிகளுக்கு படி அருளிய லீலை

பரமக்குடி : பரமக்குடி,நயினார்கோவில் சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியருளிய காலபைரவஅஷ்டமி விழாநடந்தது.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று காலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 5:00 மணி தொடங்கி மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.காலை 9:00 மணிக்கு விநாயகர், வள்ளி -தெய்வானையுடன் முருகன் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன், விசாலாட்சி அம்மன் தனித்தனியாக புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தனர். இரவு 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் காலபைரவ அஷ்டமி விழாவையொட்டி,சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுநடந்தது.அப்போது சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளையும் காத்தருளும் லீலையாக பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயிலில் நயினார்கோவில், நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X