ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பனங்கிழங்கை தீயில் சுட்டு சாப்பிட பெட்ரோல் ஊற்றியதால், 3 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர்.
தங்கச்சிமடம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த முனீஸ்வரன் மகள் சமயராணி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பனங்கிழங்கை சுட்டு சாப்பிட ஆசைப்பட்டனர். முனீஸ்வரன், அவரது டூவீலருக்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி, சிறுவர்கள் தீ பற்ற வைத்த போது, குபீரென தீ பரவியது.இதில் மூன்று குழந்தைகளுக்கு தீ காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். சத்தம் கேட்டு முனீஸ்வரன் தீயை அணைக்க முயன்ற போது, அவரும் காயம் அடைந்தார். தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.காயமடைந்த நால்வரும் ராமேஸ்வரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE