பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் காங்., கட்சியினர் அதிருப்தி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்., கமிட்டியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே தலைவராக இருந்த சொக்கலிங்கம் நீக்கப்பட்டு இளைஞரணியில் இருந்த மணிகண்டன் புதிய தலைவராக

திண்டுக்கல் : காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்., கமிட்டியில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே தலைவராக இருந்த சொக்கலிங்கம் நீக்கப்பட்டு இளைஞரணியில் இருந்த மணிகண்டன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சொக்கலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதால், திண்டுக்கல்லில் நடந்த எந்த கூட்டத்திற்கும் இவர்கள் செல்லவில்லை.இதனால் மாவட்டத்திற்குள்ளேயே இரு அணிகளாக உருவாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இவ்வாறு அணி பிரிவது கட்சிக்கு பின்னடைவே என காங்கிரஸார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X