திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடியுள்ளன. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. நேரடி வகுப்புகள் நடைபெறாத சூழலில் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு பின் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று முதல் பெற்றோரிடம் கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 419 பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் கருத்தை பதிவு செய்ய படிவம் வழங்கப்பட்டது.அதில் மாணவரின் பெயர், பள்ளிகளை திறக்கலாமா, கூடாதா, ஏன், எதற்காக என கேள்விகள் இடம் பெற்றிருந்தது. 'மாணவர்கள் நலன்கருதி பள்ளிகளை திறக்க வேண்டும்' என, 70 சதவீதம் பேர் பதிவு செய்திருந்தனர். நாளை (ஜன.8) வரை தங்கள் கருத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE