திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
திண்டுக்கல்லில் ெஹல்மேட், சீட் பெல்ட் அணியாதவர்கள், அலைபேசியில் பேசியபடி வாகனம் இயக்குவோர் என போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். இருந்தும் விதிமீறி வாகனங்களில் அதிக பாரங்களை ஏற்றிச் செல்கின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பின் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.
அதேசமயம் மொத்தமாக வேலைக்கு செல்வோர், கோயில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் ஆபத்தை உணராமல் சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணிக்கும் வாகனங்கள் அதிகவேகத்தில் செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது. இது போன்ற பயணம் மேற்கொள்வோர் கொரோனா அச்சமின்றி சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை, முகக்கவசமும் அணிவதில்லை. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE