திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அமிர்தகடேஸ்வரர், நகர துணை அமைப்பாளர் செல்வசெந்தில் மற்றும் நிர்வாகிகள் சரவணன், மேத்யூ ராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பிரபு, ஆதவன் கிராபிக்ஸ் உரிமையாளர் பாலு, 42வது வார்டு துணை செயலாளர் வில்லியம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் ஐ.பெரியசாமிக்கு நினைவு பரிசு வழங்கினர்.
வடமதுரை: தி.மு.க., நகரச் செயலாளர் கணேசன், மோர்பட்டி ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, பெருமாள்கோவில்பட்டி கிளைச் செயலாளர் பாரதிதாசன் வாழ்த்து தெரிவித்தனர்.வத்தலக்குண்டு: காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பத்திர எழுத்தர் சங்க தலைவர் சிதம்பரம்,தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோபாலன் சார்பில் அன்னதானமும், ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் சார்பில் நலத்திட்ட உதவியும் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை துவக்கி வைத்தனர்.
மாவட்ட பிரதிநிதி கணேசன், முன்னாள் கவுன்சிலர் தர்மலிங்கம், ஐயங்கார் முருகேசன், தொழில்நுட்ப தொகுதி செயலாளர் முத்துப்பாண்டி, வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சரவணன், தி.மு.க., இளைஞரணி சந்திரசேகரன், விராலிப்பட்டி ஊராட்சி தலைவர் நாகராஜன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் வரதராஜன், ஒப்பந்தகாரர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.தாண்டிக்குடி: கே.சி.பட்டியில் நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், கவுன்சிலர் அபிராமி, முன்னாள் ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE