இது உங்கள் இடம் : சினிமா ரொம்ப முக்கியமா?

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (79) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய கொரோனா வைரஸ், உலகை மிரட்டும் வேளையில், தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, தியேட்டர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா துறையினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 50 சதவீதம்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய கொரோனா வைரஸ், உலகை மிரட்டும் வேளையில், தமிழகத்தில், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க, தியேட்டர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா துறையினர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 50 சதவீதம் பார்வையாளர்களோடு இயங்க தியேட்டருக்கு, இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.latest tamil news
இந்நிலையில் நடிகர் விஜய், நேரில் சென்று, முதல்வர் இ.பி.எஸ்.சை சந்தித்ததும், 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர் இயங்க, அனுமதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் நடித்த படம், பொங்கலுக்கு வெளியாகிறதாம். ஒரு நடிகர், அவர் நடித்த படம் நஷ்டமடையக் கூடாது என கருதுகிறார்; முதல்வரும், அனுமதி வழங்குகிறார். தட்டிக்கேட்க முடியாத மக்களுக்கு, வீரியமிக்க கொரோனா தாக்கினால் நமக்கென்ன என்ற அலட்சியம் தானே அவர்களுக்கு! நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருப்போர் பெரும்பாலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களே. அவர்கள் படிப்பதற்கு கல்வி நிலையத்தை திறக்க, எத்தனை இடையூறு ஏற்பட்டன. இன்னும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு மிகவும், 'அத்தியாவசிய' தேவையான தியேட்டரை, முழுமையாக செயல்பட அனுமதித்து விட்டனர்.


latest tamil news
அவர்களுக்கு கொரோனா வந்தால் என்ன? அந்த மாணவரின் குடும்பம் பாதிக்கப்பட்டால், அந்த நடிகருக்கும், முதல்வருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விஜயின் ரசிகர்கள், பொங்கல் ரிலீஸ் படத்தைப் பார்க்க முண்டியடித்து, தியேட்டருக்கு நுழைவர். முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி என, அனைத்தும் காற்றில் பறக்கும். இவ்வாறு பள்ளிப் பிள்ளைகள், மூடிய தியேட்டருக்குள், மூன்று மணி நேரம் இடைவிடாது இருக்கக்கூடிய நிலையில், தொற்று அபாயம் ஏற்படாதா என்ன? கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற அனைத்து சாத்தியக் கூறுகளும், கல்வி நிலையங்களில் உண்டு. தியேட்டரில் சாத்தியமா? கல்வியை விட, பொழுதுபோக்கு ஊடகமான சினிமாவிற்கு, இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பது, வேதனை
அளிக்கிறது.

கொரோனா காலத்தில் மக்கள், சினிமா தியேட்டரை மறந்து விட்டனர். 'தியேட்டரை திறங்கள்' என, எவரும் போராடவில்லை. ஏனெனில் சினிமா என்பது, மக்களின் அத்தியாவசிய தேவை அல்ல. எனவே, இன்னும் சில காலங்களுக்கு, 50 சதவீத இருக்கைக்கான அனுமதியே சிறந்ததாக இருக்க முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
07-ஜன-202122:28:43 IST Report Abuse
S.Ganesan விஜயின் ஒரு படத்தில் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பதாக நடித்ததை வைத்து கொண்டு கொரோனாவை சீப் ஆக நினைத்து விட்டார்கள் போலும். தன்னுடைய பட வசூல்தான் முக்கியம். மக்களின் உயிருக்கு பாதிப்பில்லை என்ற நினைப்பில் இருக்கிறார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி , கல்லூரிகளை திறக்காமல் இருக்கும் அரசு , தனது வருமானத்துக்காக டாஸ்மாக் ஐ திறந்தது போன்று ,சினிமாக்காரர்களும் தங்களின் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறக்கச்சொல்லி கேட்பதில் ஆச்சரியமில்லை. இருவருக்குமே காசுதான் குறி. மக்கள் எக்கேடு கேட்டால் என்ன ?
Rate this:
Cancel
நா சுப்ரமணியன் என்ன சொல்ல முன்பு டாஸ்மாக் இப்பொழுது சினிமா கொட்டகை..நடத்தட்டும்..
Rate this:
Cancel
07-ஜன-202120:08:35 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K ஒரு நடிகர் தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக முதல்வரை பார்த்து பேசினாராம். உடனே, பொங்கல் காசை மக்களிடமிருந்து பறிக்க திரையரங்குகளுக்கு 100 சதவிகித அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது!இந்த நடவடிக்கை சினிமகாரர்களுக்கு ஊக்கம் கொடுக்குகிறது. 50 கோடி, 100 கோடி என்று சம்பளம் வாங்கும் நடிகர்கள், சாமானிய மக்கள் வயிற்றில் அடித்து தான் சம்பாதிக்க வேண்டும் நினைக்கிறார்கள். நடிப்பது, படமெடுப்பது, இயக்குவது, இசை அமைப்பது போன்றவை அவர்களது தொழில். ஆகவே அவர்களுக்கு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என வைத்து ஒரு நாளைக்கு, ஒரு மணிக்கு இவ்வளவு தான் என்று கொடுத்தால் போதுமானது. திரையரங்கு சினிமா டிக்கெட் விலையும் 50 பைசா, ஒரு ரூபாய் என்று இருந்தாலே போதுமானது. அரசு ஊழியர்களுக்கும் சரி, IFS, IAS, IPS போன்ற மெத்த படித்த அரசு அதிகாரிகளுக்கும் கோடிகளில் சம்பளம் இல்லை!!!!எம்.எல்.ஏ, எம்.பி களுக்கும் கோடிகளில் சம்பளம் இல்லை. பிரதமர், குடியரசு தலைவர், நீதிபதிகள், மற்ற பிற உயர்ந்த பதவிகளுக்கும் கோடிகளில் சம்பளம் இல்லை. தனியார் ஊழியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் என ஒரு பெரிய பட்டாளமே நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு கூட கோடிகளில் சம்பளம் இல்லை. அட! நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கூட கோடிகளில் சம்பளம் இல்லை. இந்த சினிமாகாரர்களுக்கு மட்டும் எதற்காக நாம் கோடிகளில் கொட்ட வேண்டும்???கோவிட்-19 தொற்று இன்னமும் அடங்கவில்லை. இதனால் ஆங்காங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆகவே சினிமாவே வேண்டாம். அது நமக்கு முக்கியமில்லை.அவசியமும் இல்லை.வேண்டாம் இந்த அடாவடி கொள்ளை!!....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X