நியூயார்க் : சிரியாவின் ரசாயன ஆயுதப் பிரச்னைக்கு அனைத்து தரப்பினரும்பேசி தீர்வு காண வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.'வீடியோ கான்பரன்ஸ்'-இதில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த 1ம் தேதி பொறுப்பேற்ற பின் நடைபெற்ற இந்த முதல் கூட்டத்தில் இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:சிரியா உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

அச்சுறுத்தல் : இது தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. இருந்தபோதிலும் ரசாயன ஆயுத தடுப்பு ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றி பாரபட்சமற்ற வகையில் பயனுள்ள புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரசாயன ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளின் கைகளுக்குச் சென்றால் அது ஒட்டுமொத்த மேற்காசிய பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும்.உலக நாடுகள் அத்தகைய வாய்ப்பை பயங்கர வாதிகளுக்கு வழங்கக் கூடாது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE