புதுச்சேரி; அகில பாரத சத்ரிய மகாசபா மாநில செயற்குழு கூட்டம் புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் வெங்கடேசன், கலைவாணன், முரளி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் வரவேற்றார்.கூட்டத்தில் தேசிய தலைவர் ராஜா மன்வேந்தர் சிங், தேசிய செயல் தலைவர் மகேந்திர சிங் தன்வார், தேசிய துணைத் தலைவர் சிங்., முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம் சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர்கள் செங்கதிரவன், ஜெயக்குமார், நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சி காலத்திற்குள் நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊடகத்தில் பணிபுரிவர்களின் ஆயுள் காப்பீடு கட்டண தொகையை அரசே செலுத்தும் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE