இடஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட தி.மு.க., வலியுறுத்தல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் தி.மு.க., வலியுறுத்தலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி

புதுச்சேரி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் தி.மு.க., வலியுறுத்தலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு கோப்பு அரசு அனுப்பியது. ஆனால் கவர்னர் அந்த கோப்பிற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறார்.புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டுமென தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. அரசு செய்ய மறுத்ததால், மாணவர்களே 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடியானதால், மேல் முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும், கவர்னர் அளித்த ஒப்புதலின்படி தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் புதிய அரசாணை வெளியிட வேண்டும். அது வரை, மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும்.இல்லையெனில் கவர்னரும், புதுச்சேரி அரசும் இணைந்து மக்களை ஏமாற்றுவது உறுதியாகி விடும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X