புதுச்சேரி; புதுச்சேரி ஆதிதிராவிடர் அரசு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முன்னாள் கவர்னர் சேத்திலால் பிறந்த தின விழா வினோபா நகரில் நடந்தது. முன்னாள் வணிக வரித்துறை ஆணையர் ஞானசம்மந்தம், சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, சேத்திலால் திருவுருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். விழாவில், கவுரவத் தலைவர் அன்பழகன், போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன், செயல் தலைவர் சுப்ரமணியன், நிர்வாகிகள் மேகராஜ், பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE