பொது செய்தி

இந்தியா

ஊக்கத்தொகை பெற பட்டியல் வெளியீடு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி; தென்னை உற்பத்தி ஊக்கத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தோட்டக்கலை வேளாண் கூடுதல் இயக்குனர் வேதாச்சலம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தென்னை சாகுபடியாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகையாக எக்டருக்கு ரூ.7, 500 வழங்க திட்டமிடப்பட்டு,

புதுச்சேரி; தென்னை உற்பத்தி ஊக்கத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தோட்டக்கலை வேளாண் கூடுதல் இயக்குனர் வேதாச்சலம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தென்னை சாகுபடியாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகையாக எக்டருக்கு ரூ.7, 500 வழங்க திட்டமிடப்பட்டு, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்விண்ணப்பங்கள் வயல் ஆய்வு செய்த பின் தென்னை சாகுபடி செய்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்ய, உழவர் உதவியங்களின் அறிவிப்பு பலகையில் இன்று (7ம் தேதி முதல் 18ம் தேதி வரை)ஒட்டப்படுகிறது.புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (https://agri.py.gov.in) என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 18 ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள வேளாண் கூடுதல் இயக்குனர் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X