புதுச்சேரி; காங்., போராட்ட எதிரொலியால், கவர்னர் மாளிகை பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த 350 வீரர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.புதுச்சேரியில் கவர்னரை கண்டித்து ஆளும் காங்., கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை 8ம் தேதி, கவர்னர் மாளிகையை முதல்வர் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.இதற்கு போட்டியாக, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாததை கண்டித்து முதல்வர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட போவதாக பா.ஜ.,அறிவித்துள்ளது.கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம், அரசு மருத்துவ மனையை சுற்றி 500 மீட்டர் துாரத்திற்கு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை உத்தரவு கலெக்டர் பூர்வா கார்க், பிறப்பித்துள்ளார்.இரு கட்சிகளின் போராட்ட அறிவிப்பு, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கவர்னர் மாளிகை, சட்டசபை வளாகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப புதுச்சேரி போலீஸ் கோரிக்கை விடுத்தது.இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் சி.ஐ.எஸ்.எப்., பிரிவைச் சேர்ந்த 3 கம்பெனியைச் சேர்ந்த 350 வீரர்கள் புதுச்சேரி வந்துள்ளனர். கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி விடுதியில் தங்கியுள்ள வீரர்களுக்கு, நேற்று காலை 3 மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE