புதுச்சேரி; கவர்னர் மாளிகை சுற்றி 500 மீட்டர் துாரத்திற்குள் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூர்வா கார்க், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவட்சவா, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் ஆகியோர் கூட்டாக எச்சரித்துள்ளனர்.அவர்கள் அளித்த பேட்டி:கவர்னர் மாளிகை முன்பு நாளை 8 ம் தேதி, காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. புதுச்சேரியில் போராட்டம், ஆர்ப்பாட்டம், தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த காங்., கூட்டணி கட்சிகள் அனுமதி கோரியது.அரசின் வழக்கமான செயல்பாட்டிற்கு தடை இல்லை என்பதை உறுதிப்படுத்த, கவர்னர் மாளிகை, சட்டசபை, முதல்வர் வீடு, அமைச்சர் குடியிருப்புகள், தலைமை செயலகம், போலீஸ் தலைமையகம், அரசு மருத்துவமனையில் இருந்து 500 மீட்டர் துாரத்திற்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கலெக்டரின் அனுமதியின்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது.மக்களின் அன்றாட வாழ்கைக்கு இடையூறு செய்யக் கூடாது. பொது சொத்துக்கு தீங்கு ஏற்படுத்த கூடாது.அரசின் செயல்பாட்டிற்கும் எந்த தடையும் இருக்க கூடாது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் , அரசு கூறும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். ரோமண்ட் ரோலண்ட் நுாலகத்திற்கு வருவோர், துமாஸ் வீதி வழியாக அனுமதிக்கப்படுவர். போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு சிரமம் ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறை அல்லது 1031 எண்ணில் தெரிவிக்கலாம்.இன்று 7 ம் தேதி காலை முதல் மறு உத்தரவு வரும் வரை பாரதி பூங்காவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்போர்,முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தனி நபர் மீது அவதுாறான கருத்துக்களை வெளியிட வேண்டாம். மாவட்ட நிர்வாகத்தால் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், பணிகளை துல்லியமாக பின்பற்ற வேண்டும்.காவல்துறை, அமைப்பாளர்கள் இருவருக்கும் சட்ட விதிகளை நிலைநிறுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, மீறுபவர்கள் மீது சட்டப்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE