புதுச்சேரி; அரசு சட்டக்கல்லுாரியில் இறுதி ஆண்டு மாணவர்களின் மறுகூட்டல் விண்ணப்பத்தை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி காலாப்பட்டு அரசு சட்டகல்லுாரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதி மின்னஞ்சல் மூலமாக கல்லுாரிக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் டெக்னிக்கல் பிரச்னை என்று கூறி, மின்னஞ்சல் வரவில்லை என கூறி மாணவர்களுக்கு விடுப்பு போடப்பட்டுள்ளது.மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பணம் செலுத்தியதை கல்லுாரி நிர்வாகம் பல்கலைகழகத்திற்கு அனுப்பவில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக மறு கூட்டலுக்கு கால அவகாசம் நீடிக்க வேண்டும் என கோரி பாதித்த மாணவர்கள் கல்லுாரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக தங்களின் பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் பேரணியாக சென்று கவர்னரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE