காட்டுமன்னார்கோவில் டெல்டாவில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாரான சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து முளைப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு மூலம் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 145 நாட்கள் கொண்ட பி.பி.டி., சாதனா, மகேந்திரா போன்றவைகளும், 120 நாட்கள் கொண்ட எல்.என்.ஆர்., - ஆர்.என்.ஆர்., - ஜே.ஜே.எல்., ஜோதிகா போன்ற நெல் ரகங்களை பயிரிட்டனர்.கடந்த மாதம் 100 முதல் 110 நாட்கள் ஆகி பூ வெளி வந்த நிலையிலும், சூல் பயிர் நிலையிலும் 'புரெவி' புயல் தாக்கத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.வெள்ளப்பெருக்கால் பயிர்களில் பல நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றதால் தற்போது நெல் பதர் களாகவும், கருப்பு நிறமாகவும் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் நெல் மகசூல் மிக குறைந்த அளவில் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டிருந்த சூல் பயிர்களுக்கு விவசாயிகள் மேலும் உரம், பூச்சி மருந்து அடித்து பயிர்களைத் தேற்றினர். தற்போது நெற்பயிர் கதிர்கள் முதிர்ந்த நிலையில் உள்ளன.எடையார்பிள்ளையார் தாங்கல், நடுத்திட்டு, ஆயங்குடி போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.ஆனால், கடந்த ஒரு வாரமாக மீண்டும் பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கிறது.வயல்களில் தண்ணீர் வடிந்தாலும், தினமும் பரவலாக மழை பெய்து வருவதால் ஈரப்பதத்தால் முளைப்பு ஏற்பட்டு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகுதே' என டெல்டா விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE