சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.ஐ.டி.யூ.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கடலுார் - புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சி.ஐ.டி.யூ., ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பாதிரிபுலியூர் ஜவான்ஸ் பவான் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் சுப்புராயன், துணைத் தலைவர் ஆளவந்தார், சாந்தகுமார், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில்,

கடலுார் - புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சி.ஐ.டி.யூ., ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பாதிரிபுலியூர் ஜவான்ஸ் பவான் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் கருப்பையன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர் சுப்புராயன், துணைத் தலைவர் ஆளவந்தார், சாந்தகுமார், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அமைப்புசாரா வாரிய ஆன்லைன் பதிவு உள்ளிட்ட இதர பிரச்னைகளை தொழிற்சங்கங்களோடு பேசி தீர்வு காண வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பண்ருட்டிபண்ருட்டியில் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தலைவர் பழனிவேல் சிறப்புரையாற்றினர். ராஜேந்திரன், நாகராஜ், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.வடலுார்வடலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலக்குழு கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் வடிவேல், துணைத் தலைவர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 101 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.சி.ஐ.டி.யூ., ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசை கண்டித்து, கடலுார், பண்ருட்டி, வடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X