பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வருமா நுாலகம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பெண்ணாடம் - காரையூரில் பூட்டிக் கிடக்கும் கிராமப்புற நுாலகத்தைத் திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த காரையூர் ஊராட்சியில் கடந்த 2009ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற நுாலகம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.இதன் மூலம் இக்கிராம இளைஞர்கள், பள்ளி,கல்லுாரி மாணவர்கள்

பெண்ணாடம் - காரையூரில் பூட்டிக் கிடக்கும் கிராமப்புற நுாலகத்தைத் திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த காரையூர் ஊராட்சியில் கடந்த 2009ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமப்புற நுாலகம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது.இதன் மூலம் இக்கிராம இளைஞர்கள், பள்ளி,கல்லுாரி மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தினசரி நாளிதழ் செய்திகள், பொது அறிவு, வரலாறு, அறிவியல் உட்பட பல்வேறு நுால்களை படித்து பயனடைந்து வந்தனர்.ஓரிரு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நுாலகம் நாளடைவில் எவ்வித அறிவிப்பும் இன்றி பூட்டப்பட்டது.இதனால் நுாலகத்தில் உள்ள புத்தகங்கள் பராமரிப்பின்றி பாழாகி வருவதுடன், நுாலக கட்டடம் கால்நடைகளின் தொழுவமாக மாறி வருகிறது.எனவே, பூட்டிக்கிடக்கும் நுாலகத்தைத் திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X