கடலூர் - பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கடலுார் மாவட்டத்தில் 465 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பெற்றோர்களிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது.மாவட்டத்தில் 222 உயர்நிலை, 243 மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர்களிடம் வெள்ளைத்தாள் வழங்கப்பட்டு கருத்தினை பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது.
கடலுாரில் மழை காரணமாக குறைவான அளவிற்கே பெற்றோர்கள் வந்திருந்தனர்.அவர்களிடம், பள்ளிகளைத் திறக்கலாம் என்றால் அனைத்து வகுப்புகளையும் நடத்தலாமா அல்லது குறிப்பிட்ட வகுப்புகளை மட்டும் நடத்தலாமா என கருத்துக்கள் கேட்கப்பட்டது.பெற்றோரின் கருத்துக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலமாக தொகுக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE