பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகம் முன்பு குப்பையுடன் நிற்கும் வண்டி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு - மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீடு மற்றும் கடைகளில் கொட்டப்படும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து வந்தது. கடந்த வாரம் குப்பைகளை அள்ளிக்கொண்டு மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகரின் வழியாக பெண்ணையாற்றின் கரையில் கொட்ட சென்றனர்.அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதியில் குழந்தைகள் பெரியோர்கள் அதிகமாக

மூங்கில்துறைப்பட்டு - மூங்கில்துறைப்பட்டு பகுதியில் வீடு மற்றும் கடைகளில் கொட்டப்படும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து வந்தது. கடந்த வாரம் குப்பைகளை அள்ளிக்கொண்டு மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகரின் வழியாக பெண்ணையாற்றின் கரையில் கொட்ட சென்றனர்.அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதியில் குழந்தைகள் பெரியோர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் எங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டகூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் துாய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை ஊராட்சி அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.கடந்த பத்து நாட்கள் ஆகியும் குப்பைவண்டியில் உள்ள குப்பைகளை அகற்றாததால் குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் மழை பெய்து வருவதால் அவ்வழியே யாரும் செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள துணை மின்நிலைய அலுவலக ஊழியர்கள், அப் பகுதி குடியிருப்பு வாசிகள் அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பலன் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X