கள்ளக்குறிச்சி - கள்ளக்குறிச்சி கருவூலம் அலுவலகம் முன்புறம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஒரு ஓட்டுநர், ஒரு அவசர மருத்துவ உதவியாளரை கொண்டு 2 ஆம்புலன்ஸ்களில் இயக்கி, அதன் மூலம் ஒரு பங்கு தொகையினை கையாடல் செய்யும் நிர்வாகத்தை கண்டித்தல், கையாடல் செய்வதை தட்டி கேட்பவர்களை பழவாங்கும் நடவடிக்கையை கண்டிப்பது.பொதுமக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மைலேஜ், டீசல் சிக்கனத்தை பிரதானமாக கொண்டு செயல்படுவது. ஆம்புலன்ஸ்களில் உள்ள விலை உயர்ந்த ரேடிேயட்டர்களை கழற்றி வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து, பழுதுடன் உள்ள ரேடிேயட்டர்களை பொருத்துதல், கையாடல் நடவடிக்கைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பணபலன்களை அரசு நேரடியாக வழங்குதல் உட்பட பல்வேறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE