திருக்கோவிலூர் பகுதியில் கனமழை ; நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் - திருக்கோவிலுார் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. இச்சூழலில் கடந்த மாதம் 17ம் தேதி இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி

திருக்கோவிலுார் - திருக்கோவிலுார் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. இச்சூழலில் கடந்த மாதம் 17ம் தேதி இரண்டு நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது.இச்சூழலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு துவங்கிய மழை நேற்று மதியம் வரை விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஏரி, குளங்களில் மீண்டும் தண்ணீர் நிரம்பி ஓடை, வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது.நிலத்தடி நீரைக் கொண்டு முன்கூட்டியே சம்பா சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்களில் தற்போது நெல் அறுவடைக்கு தயாராகி வருகி வரும் நிலையில் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டு முன்கூட்டியே உளுந்து விதைப்பு செய்து லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், நெல் பயிர் செய்த விவசாயிகளும் கஷ்டத்தை எதிர் நோக்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X