பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
சங்கராபுரம் - சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த லாபம் கிடைக்கும் கீரை வகைகளை சாகுபடி செய்யும் பணியில் நெடுமானுார், காட்டு கொட்டாய், பொய்க்குனம், செட்டியந்துார் ஆகிய கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சிறு கீரை, முளை கீரை, அரை கீரை, பாளைகீரை, வெந்தய கீரை,

சங்கராபுரம் - சங்கராபுரம் பகுதியில் கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த லாபம் கிடைக்கும் கீரை வகைகளை சாகுபடி செய்யும் பணியில் நெடுமானுார், காட்டு கொட்டாய், பொய்க்குனம், செட்டியந்துார் ஆகிய கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சிறு கீரை, முளை கீரை, அரை கீரை, பாளைகீரை, வெந்தய கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பருப்பு கீரை, முருங்கை கீரை, கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை சங்கராபுரம் பகுதி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கீரை வகைகள் நன்கு வளர்ந்துள்ளதால் கீரைகளை அறுவடை செய்து கட்டு கட்டாக கட்டி ஒரு கட்டு 5 ருபாய் என சங்கராபுரம் நகரில் உள்ள உழவர் சந்தையில் விற்பனை செய்கின்றனர்.குறைந்த விலையில் தினசரி சாப்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கும் அதிக சத்துள்ள கீரைகளை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்கி செல்வதால் விவசாயிகளுக்கு அலைச்சலின்றி தினசரி கைமேல் காசு கிடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X