தமிழக நிகழ்வுகள்:-
1. ஆர்.டி.ஓ., உட்பட எட்டு பேர் மீது வழக்கு
திருப்பூர்: திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2. ரூ.8.63 கோடிக்கு வீடுகள் விற்றவர்கள் மீது வழக்கு
கோவை : போலி ஆவணம் தயாரித்து, 8.63 கோடி ரூபாய்க்கு வீடுகள் விற்ற கட்டுமான நிறுவன இயக்குனர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
3. தணிக்கை அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வேலுார் : வேலுாரில் உள்ள, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து, கணக்கில் வராத, 1.04 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

4. போலி சான்றிதழில் பணி 5 பேரை தேடும் போலீஸ்
கோத்தகிரி: போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5. தாய் கொலை: நாடகமாடிய மகன் கைது
பெரம்பலுார்:தாயை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மகனை, போலீசார் கைது செய்தனர்.

6. உயிரை பறித்த பொங்கல் பரிசு தம்பியை கொன்ற அண்ணன் கைது
தஞ்சாவூர் : பொங்கல் பரிசு பணத்தை கேட்டு, தந்தையிடம் தகராறு செய்த தம்பியை, கட்டையால் அடித்துக் கொன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் குற்றம்:-
ஹெராயின் விற்ற வீரர் கைதுசிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், ஹெராயின் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக, இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களில் ஒருவர், ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த அவரிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

உலக நடப்பு:-
குண்டு வெடித்து 2 குழந்தைகள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம், பெஷாவர் நகரில், இரு குழந்தைகள், வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கண்டெடுத்த இரு கையெறி குண்டுகளை, பந்துகள் என நினைத்து, வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதை குழந்தைகள் வீசி விளையாடிய போது, குண்டுகள் வெடித்தன. இதில், இரு குழந்தைகள் பலியாயினர். படுகாயம் அடைந்த மூன்று குழந்தைகள், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE