பொது செய்தி

தமிழ்நாடு

பழைய குற்றவாளிகளுக்கு எஸ்.பி., அறிவுரை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
விழுப்புரம்; பழைய குற்றவாளிகள், எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.விழுப்புரத்தில், பழைய குற்றவாளிகளுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில்

விழுப்புரம்; பழைய குற்றவாளிகள், எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.விழுப்புரத்தில், பழைய குற்றவாளிகளுக்கு அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலை வகித்தனர்.தலைமை தாங்கிய எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பேசியதாவது:மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடக்க வேண்டும். ஏற்கனவே, குற்றச்செயல்களில் கைதானவர்கள் எவ்வித பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.திருந்தி வாழ முன்வரும் சாராய வியாபாரிகளுக்கு, அரசு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 15 பேருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கந்து வட்டி பிரச்னை தொடர்பாக, போலீஸ் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதில், மொபைல் எண் அச்சிடப்பட்டிருக்கும். அந்த எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், மகேஸ்வரி, வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ராஜலட்சுமி, சுந்தர்ராஜன் மற்றும் பழைய குற்றவாளிகள் 100 பேர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X