திண்டிவனம்; திண்டிவனத்தில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமம் ஏரிக்கரையில் ஐயனாரப்பன் கோவில் மற்றும் திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியல்களை, சில தினங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் உடைத்து, அதிலிருந்த ஆயிரக்கணக்கான பணத்தை திருடிச் சென்றனர்.இந்த சம்பவங்கள் குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கிடைத்த தகவலின் பேரில், திண்டிவனம் பசோத்தம்மன் கோவில் தெருவை சோர்ந்த ேஷக் மகன் அம்ஜாத்,20; அவரப்பாக்கம் தாடிக்காரன் குட்டை தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.அதன்பேரில் போலீசார், இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE