பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
சின்னசேலம் - பள்ளிகள் திறப்பது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஜன.6ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத் தேர்வு எழுதும் 9, 10,11, 12-ம்

சின்னசேலம் - பள்ளிகள் திறப்பது குறித்து சின்னசேலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஜன.6ம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத் தேர்வு எழுதும் 9, 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர் முன்னிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்புக் கூட்டம் சின்னசேலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மழை காரணமாக குறைவான பெற்றோர்களே வந்திருந்தனர்.கூட்டத்தில் பெற்றோர்கள் கூறுகையில், தற்போது நடந்து வரும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் சரியாக கவனிக்காமல், எப்போதும் விளையாட சென்று விடுவதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X