தமிழ்நாடு

ஏக்கம்! மாற்றுப்பணி எதிர்பார்த்து வங்கி ஊழியர்கள் .... இதே நாளில் கலைக்கப்பட்ட நகர கூட்டுறவு வங்கி

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : மோசடி, ஊழல் புகார் காரணமாக மதுரை நகர கூட்டுறவு வங்கி 16 ஆண்டுகளுக்கு முன் 2005 ஜன., 7ல் கலைக்கப்பட்டது. அதில் பணி புரிந்த ஊழியர்கள் மாற்றுப்பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த வங்கி செயலாளராக மாயன் இருந்த போது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. அவர் உள்ளிட்ட சிலர் மீது வணிகவியல் குற்றப்புலனாய்வு துறையினர் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இதில் முதலீடு
ஏக்கம்! மாற்றுப்பணி எதிர்பார்த்து வங்கி ஊழியர்கள் .... இதே நாளில் கலைக்கப்பட்ட நகர கூட்டுறவு வங்கி

மதுரை : மோசடி, ஊழல் புகார் காரணமாக மதுரை நகர கூட்டுறவு வங்கி 16 ஆண்டுகளுக்கு முன் 2005 ஜன., 7ல் கலைக்கப்பட்டது. அதில் பணி புரிந்த ஊழியர்கள் மாற்றுப்பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த வங்கி செயலாளராக மாயன் இருந்த போது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்தன. அவர் உள்ளிட்ட சிலர் மீது வணிகவியல் குற்றப்புலனாய்வு துறையினர் மோசடி வழக்குகளை பதிவு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி பணம் திரும்ப வழங்கப்பட்டது. இந்த வங்கியிலிருந்து கடன் பெற்றவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்கும் முயற்சிகளும் நடந்தன. இருப்பினும் வங்கி கலைக்கப்பட்டதால் இதில் பணிபுரிந்தவர்கள் பணி இழந்தனர். மறுவேலைவாய்ப்பு வேண்டி 16 ஆண்டுகளாக அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பணி இழந்த நாகமலைபுதுக்கோட்டை ரவி கூறியதாவது: வங்கியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். இவர்களில் பலர் தற்போது 60 வயதை கடந்து விட்டனர். வங்கி செயல்பட்ட போதே 18 பேர் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முப்பது பேர் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எந்த புகாரிலும் சிக்காத ஊழியர்கள் நிலைமை பரிதாபம். கோத்தகிரி நகர கூட்டுறவு வங்கியில் இதுபோன்ற மோசடி நடந்து கலைக்கப்பட்ட போது, ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டது. இந்த வங்கியை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது வேதனையளிக்கிறது. வங்கியில் தணிக்கை செய்து, செயல்பட நடவடிக்கை எடுத்தால் பழையபடி லாபம் ஈட்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜன-202112:00:55 IST Report Abuse
ஆப்பு அடப்பாவமே... 2005 ல போன வேலை திரும்ப கிடைக்கும்னு 15 வருஷமா காத்திருக்கீங்களா? அதுக்கு முன்னாடி எனக்கு வங்கிக் கணக்குல 15 லட்சம் வந்துரும் போலிருக்கே...
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
07-ஜன-202109:32:05 IST Report Abuse
Arul Narayanan Scandal news is of Madurai Town co-op bank.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X