பள்ளிப்பட்டு; வரும்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் விதமாக, நீண்டகால பயிரான, 'மகாகனி' மரக்கன்றுகளை நடவு செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆண்டு முழுதும் விவசாய பணியில் ஈடுபட முடியாதவர்கள் மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள், விவசாய நிலத்தின் ஒரு பகுதியாகவும், முழுமையாகவும் நீண்டகால பயிர்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதில், சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற மரங்களை வளர்த்து வருகின்றனர். தற்போது, மேலும் மதிப்பு கூட்டு மர வகையை சேர்ந்த, 'மகாகனி' மரங்களை வளர்க்க துவங்கி உள்ளனர். மகாகனி மரம், ஓங்கி உயர்ந்து வளரும். இதன் தண்டு பகுதி, ஐந்து மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்கும் என்பதால், மர பலகைக்கு உகந்தது. இந்த மரப்பலகையில், படகு வீடுகள் கட்டப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.முழு வளர்ச்சியை எட்ட, 30 ஆண்டு காலம் ஆகும் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர். குறைந்த நிலப்பரப்பில், அதிகளவு லாபம் தரக்கூடியது.பராமரிப்பு எளிது என்பதால், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் விவசாயிகள் பலரும், 'மகாகனி' நடவு செய்வதில், ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE