போலீஸ் டைரி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
இருவருக்கு 'காப்பு'திருத்தணி: திருத்தணி அடுத்த, முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் காதர்பாஷா மகன் ஹல்லாபாஷ், 45. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாவா உசேன், 55, என்பவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம், ஹல்லாபாஷ் கடைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பாவா உசேன், அவரது உறவினர்கள் அலி, 24, நுார்ஹல்லா, 23, இளையாஸ், 22 ஆகிய நால்வரும்,

இருவருக்கு 'காப்பு'திருத்தணி: திருத்தணி அடுத்த, முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் காதர்பாஷா மகன் ஹல்லாபாஷ், 45. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாவா உசேன், 55, என்பவருக்கும், இடையே முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்றுமுன்தினம், ஹல்லாபாஷ் கடைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பாவா உசேன், அவரது உறவினர்கள் அலி, 24, நுார்ஹல்லா, 23, இளையாஸ், 22 ஆகிய நால்வரும், ஹல்லாபாஷ்யை வழிமடக்கி தாக்கினர்.மேலும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, நுார்ஹல்லா, இளையாஸ் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.நகை, பணம் திருட்டுதிருவாலங்காடு: திருவாலங்காடு அடுத்த, வீரகோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுந்தரம், 65. இவர், நேற்றுமுன்தினம், வீட்டை பூட்டிக் கொண்டு சொந்த வேலையாக கனகம்மாசத்திரம் சென்றார்.அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ஐந்தரை சவரன் நகை, 9,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ரூ.50 ஆயிரம் பறிப்புநகரி: சித்துார் மாவட்டம், வடமால்பேட்டை அடுத்த, வடமால கிராமத்தைச் சேர்ந்தவர் நாகைய்யா, 60. இவர், வேளாண் துறையில் ஊழியராக பணிபுரிந்து, சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வடமால்பேட்டை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், ஓய்வூதிய தொகை, 50 ஆயிரம் ரூபாயை, பெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.அப்போது, ஆட்டோவில் தயாராக இருந்த மர்ம நபர்கள், நாகைய்யாவை திசை திருப்பி, 50 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். நாகைய்யா அளித்த புகாரையடுத்து, வடமால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ரேஷன் அரிசி பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா பகுதியில் செஞ்சுலஷ்மி காலனியில் உள்ள கிடங்கு ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, காளஹஸ்தி விஜிலென்ஸ் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கிடங்கில் சோதனை செய்த போது, லாரியில் கடத்துவதற்கு தயாராக இருந்த, 30 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பாலாஜி, 32, முகமத், 22, சேகர், 35, ஆகிய மூவரை கைது செய்தனர்.இதே போன்று, புத்துார் அடுத்த, நாராயவணம் கீளகரம் கிராமத்தில், சோமஸ்வரன் என்பவர் ரேஷன் அரிசி வாங்கி வியாபாரம் செய்து வருவதாக அறிந்த விஜிலென்ஸ் சம்பவ இடத்திற்கு சென்று, 22 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், சோமஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலைநகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா, புங்கை தெருவைச் சேர்ந்தவர் சீரஞ்சீவிராஜு மனைவி ஜோதிசேரூபா, 41. இவர், ஒன்றரை ஆண்டுக்கு முன், விபத்து ஒன்றில் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ரேணிகுண்டா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X