தரைப்பால சேற்றில் சிக்கும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை; சேறும், சகதியுமான ஆரணி ஆற்று, தற்காலிக தரைப்பால சாலையில், லாரி ஒன்று சிக்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.ஊத்துக்கோட்டை- - திருவள்ளூர் சாலையில், ஆரணி ஆற்றின் மேல், 28 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.அப்பகுதியில், போக்குவரத்திற்காக, புதிதாக பாலம் கட்டும் இடம் அருகே, தற்காலிக தரைப்பால சாலை

ஊத்துக்கோட்டை; சேறும், சகதியுமான ஆரணி ஆற்று, தற்காலிக தரைப்பால சாலையில், லாரி ஒன்று சிக்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.ஊத்துக்கோட்டை- - திருவள்ளூர் சாலையில், ஆரணி ஆற்றின் மேல், 28 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.அப்பகுதியில், போக்குவரத்திற்காக, புதிதாக பாலம் கட்டும் இடம் அருகே, தற்காலிக தரைப்பால சாலை அமைக்கப்பட்டது.சமீபத்தில், 'நிவர், புரெவி' புயல்களால் பெய்த பலத்த மழையால், அந்த சாலை இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து பாதித்தது.ஒரு மாதத்திற்கு பின், புதிதாக, தரைப்பால சாலை அமைக்கப்பட்டது. இதில், பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து சென்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், தற்காலிக தரைப்பால சாலை, சேறும், சகதியுமாக மாறியது. தண்ணீர் செல்ல குழாய் அமைத்த பகுதியில் வாகனங்கள் செல்லும் போது, அப்பகுதி சேதம் அடைந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, லாரி ஒன்று தரைப்பால சாலையில் சென்றது. சாலை சேதம் அடைந்ததால், பாதி துாரத்திற்கு மேல் செல்ல முடியாமல், லாரி நடுவழியில் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.நேற்று, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாரதி மற்றும் போலீசார் ஜே.சி.பி., மூலம் லாரியை மீட்டனர். பின், போக்குவரத்து சீரானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், மீண்டும் கார் ஒன்று சேற்றில் சிக்கியது. இதனால் தரைப்பால சாலையில் போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X