பள்ளிப்பட்டு; தண்ணீர் தேங்கி நிற்காத மலைச்சரிவை ஒட்டிய வயல்களில், பச்சை பட்டாணி சாகுபடியை விவசாயிகள் செய்கின்றனர். உள்ளூர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்வதால், கணிசமான லாபம் கிடைக்கிறது.பள்ளிப்பட்டு சுற்றுப் பகுதியில், ஏராளமான மலைகள் உள்ளன. இந்த பகுதியில், மாந்தோப்புகள் மற்றும் மலைப்பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மலைச்சரிவில், தண்ணீர் தேங்கி நிற்காது என்பதால், நெல் பயிரிடுவதை காட்டிலும், மலைப் பயிர்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.அந்த வகையில், பச்சை பட்டாணியும் ஒன்று. மணற்பாங்கான நிலப்பரப்பில், பச்சைப் பட்டாணி மானாவாரி பயிராக விளைகிறது.இதில், அறுவடை செய்யப்படும் பச்சை பட்டாணியை, விவசாயிகள் நேரடியாக, உள்ளூர் சந்தைகளில், விற்பனை செய்கின்றனர். இதனால், கணிசமான லாபம் கிடைக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE