பொது செய்தி

தமிழ்நாடு

கோழிகளுக்கு நோய் தாக்கம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை; வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், நோய் தாக்கத்தால் அடுத்தடுத்து இறந்து வருகின்றன. இதனால், அடிமாட்டு விலைக்கு, கோழிகளை கறிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், பெருவெட்டு கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பொழுதுபோக்கு மற்றும் கவுரவத்திற்காக, இளைஞர்கள் பலரும் உயர் ரக கோழிகளை வளர்த்து

ஆர்.கே.பேட்டை; வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள், நோய் தாக்கத்தால் அடுத்தடுத்து இறந்து வருகின்றன. இதனால், அடிமாட்டு விலைக்கு, கோழிகளை கறிக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், பெருவெட்டு கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பொழுதுபோக்கு மற்றும் கவுரவத்திற்காக, இளைஞர்கள் பலரும் உயர் ரக கோழிகளை வளர்த்து வருகின்றனர்.பெருவெட்டு கோழிகள், இனப்பெருக்கத்திற்காகவும், சிறுவெட்டு கோழிகள் அடை காக்கவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.ஒரு வாரமாக, ஏராளமான கோழிகள் அடுத்தடுத்து இறந்து வருகின்றன. கோழிகளுக்கு வழக்கமாக தோன்றும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சளி போன்று இல்லாமல், புது விதமான நோய் தாக்கத்தால், கோழிகள் பாதிக்கப்படுவதால், அதன் உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.இழப்பை தடுக்க முடியாமல், ஆயிரம் ரூபாய்க்கு நான்கு கோழிகள் என, அடிமாட்டு விலைக்கு இறைச்சிக்காக விற்பனை செய்து வருகின்றனர். பெருவெட்டு கோழிகள் குறைந்தபட்சம், 1,500 ரூபாய்க்கு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் கூறுகையில், கோழிகளுக்கு, 'கொரைசா' நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, உரிய மருந்து அளித்தால், இழப்பை தவிர்க்கலாம். நோய் பாதிப்பு குறித்து, கால்நடை மருத்துவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X