சென்னை; நட்சத்திர ஓட்டலில், 'டிவி' நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, 29. 'டிவி' நடிகையான இவர், பூந்தமல்லி அருகே, கணவர் ஹேம்நாத், 32, என்பவருடன், நட்சத்திர ஓட்டலில் தங்கி, படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார்.ஓட்டல் அறையில், டிச., 9ம் தேதி அதிகாலை, 2:30 மணியளவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, நசரத்பேட்டை போலீசார் விசாரித்தனர்.ஹேம்நாத்திடம், ஆறு நாட்கள் விசாரணை நடத்திய போலீசார், சித்ராவை தற்கொலைக்கு துாண்டியதாக, அவரை கைது செய்து, பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில், 'தன் மகனை, அவசரகதியில் போலீசார் கைது செய்துவிட்டனர். சித்ரா தற்கொலை விவகாரத்தில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அவர்கள் பற்றி விசாரித்து, உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும்' எனக் கூறியிருந்தார்.அதேபோல, சித்ராவின் தாய் விஜயா, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்த புகாரில், 'தன் மகளை ஹேம்நாத் அடித்துக் கொன்றுவிட்டார். இந்த வழக்கை சி.பிசி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE