பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் திடீர் வருகை மின் விளக்கு சீரமைப்பு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம், ஓரிக்கை செல்லம்மாள் நகர், நேரு நகர் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திடீரென சென்று, ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இப்பகுதிகளில் இருந்த அடிப்படை பிரச்னைகளை சீரமைக்கும்படி, அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.இது குறித்து, நேரு நகர் முருகேசன் கூறியதாவது:இருளர் இனத்தவர் வசிக்கும் இப்பகுதியில், பல மாதங்களாக மின்

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம், ஓரிக்கை செல்லம்மாள் நகர், நேரு நகர் பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திடீரென சென்று, ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இப்பகுதிகளில் இருந்த அடிப்படை பிரச்னைகளை சீரமைக்கும்படி, அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.இது குறித்து, நேரு நகர் முருகேசன் கூறியதாவது:இருளர் இனத்தவர் வசிக்கும் இப்பகுதியில், பல மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல், தெருவில் தேங்கி நிற்கிறது.மேலும், 2009ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் கட்டப்பட்டும், பயன்பாடின்றி உள்ளது.இதனால், பக்கத்து நகருக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். அறுந்து விழும் நிலையில் பழுதடைந்து மின் கம்பி இருப்பதால், அதை மாற்ற வேண்டும் என, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தோம்.அவர் ஆய்வு செய்து சென்ற பின், நேற்று காலையில், கிராம நிர்வாக அலுவலர், நகராட்சி ஆணையர் மற்றும் பலர், எங்கள் பகுதிக்கு வந்தனர். மின் விளக்கு சரிசெய்யப்பட்டு, குப்பை உடனடியாக எடுக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X