காஞ்சிபுரம் - இறுதி வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, 62 ஆயிரத்து, 358 பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட, உத்திரமேரூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் ஆலந்துார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, நவம்பர், 16ம் தேதி, அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் வெளியிட்டார்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், 12.73 லட்சம் வாக்காளர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, 2021 ஜனவரி, 5ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள்பெறப்படும் என,தெரிவிக்கப்பட்டிருந்தது.இடையே, நவம்பரில் இரண்டு சிறப்பு முகாம்களும், டிசம்பரில் இரண்டு முகாம்களும் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் வரை, விண்ணப்பங்கள் பெறுவது முடிந்தது.அதன்படி, இரு மாதங்களாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 47 ஆயிரத்து, 106 விண்ணப்பங்கள், பெயர் நீக்க, 6,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தவிர, திருத்தம் செய்ய, 5,260 விண்ணப்பங்களும், தொகுதிக்குள் இடம் மாற, 3,385 விண்ணப்பங்கள் என, மொத்தம், 62 ஆயிரத்து, 358 பேர் விண்ணப்பங்களை, அளித்துள்ளனர். இம்மாதம், தேர்தலுக்கான இறுதி வாக்காளர் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE