உத்திரமேரூர் - பள்ளிகள் திறப்பது குறித்து, உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர்களிடம், கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.பொங்கல் விடுமுறைக்குப்பின், தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, அரசு உத்தரவிட்டது.அதன்படி, உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகள் திறப்பது குறித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின், பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில், பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை, அறிக்கையாக தயாரித்து, மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என, பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார். தொடர்ந்து, 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள சத்துணவு மாணவர்களுக்கு, உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE