பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாமா என கருத்து கேட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாமா என கருத்து கேட்பு

Added : ஜன 07, 2021
Share
உத்திரமேரூர் - பள்ளிகள் திறப்பது குறித்து, உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர்களிடம், கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.பொங்கல் விடுமுறைக்குப்பின், தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, அரசு உத்தரவிட்டது.அதன்படி, உத்திரமேரூர் அடுத்த,

உத்திரமேரூர் - பள்ளிகள் திறப்பது குறித்து, உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர்களிடம், கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.பொங்கல் விடுமுறைக்குப்பின், தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, அரசு உத்தரவிட்டது.அதன்படி, உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகள் திறப்பது குறித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியரின், பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.இதில், பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை, அறிக்கையாக தயாரித்து, மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என, பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார். தொடர்ந்து, 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள சத்துணவு மாணவர்களுக்கு, உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X