செங்கல்பட்டு - செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், 670 ஏக்கர் பரப்பளவில், தர்ப்பூசணி பயிர் செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்கள், 10 முதல் 25 நாட்கள் வளர்ந்த பயிர்களாக உள்ளது. இரு நாட்களாக பெய்த கன மழையால், ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சாந்தாசெலின்மேரி, வட்டார உதவி இயக்குனர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர், மேற்கண்ட தாலுகாக்களில், கள ஆய்வு பணிகள் செய்தனர்.அப்போது, விவசாயிகளுக்கு, இயக்குனர் சாந்தாசெலின்மேரி கூறியதாவது;தற்போது பெய்து வரும் கன மழையால், சிறியதாக உள்ள, தர்ப்பூசணி பயிர், வேர் அழுகல் நோயால் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி, தண்ணீர் வடிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.மண் அதிக ஈரமாக இருப்பதால், வேர் அழுகல் பிரச்னையை கட்டுப்படுத்த, ட்ரைகோடெர்மா விரிடி என்ற இயற்கை பூஞ்சாணத்தையும், சூடோமோனஸ் என்ற பாக்டீரியா பயிர் பாதுகாப்பு மருந்தையும் பயன்படுத்தலாம்.பத்து கிலோ ஈரமான மணலுடன், ஒவ்வொரு மருந்தையும், 1 கிலோ வீதம் கலந்து, வேர் பகுதிக்கு அருகில் இடும் பட்சத்தில், பயிர்களில் வேர் அழுகல் பிரச்னை வராமல் பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE